full screen background image

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம்

பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கின்றது.

இந்தப் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். நிதி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ், இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை, இயக்கம் – மகிழ் திருமேனி, இசை – அரோல் கரோலி, ஒளிப்பதிவு – K.தில்ராஜ், கலை – T.ராமலிங்கம், படத் தொகுப்பு – ்ரீகாந்த் NB, பாடல்கள் – மதன் கார்க்கி, தயாரிப்பு நிர்வாகம் – E.ஆறுமுகம், விநியோக நிர்வாகம் – ராஜா.C, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஸ்டாலின், நாயகி நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பல தொழில் நுட்பக் கலைஞர்களும் பங்கு கொண்டனர்.

Our Score