full screen background image

தமிழ் ரசிகர்களைக் கவரப் போகும் புதுமுக நடிகை நாய்ரா ஷா..!

தமிழ் ரசிகர்களைக் கவரப் போகும் புதுமுக நடிகை நாய்ரா ஷா..!

ஜாகுவார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மிருகா’.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், ராய் ல‌ஷ்மி, தேவ் கில், நாய்ரா ஷா, வைஷ்ணவி சந்திரன் மேனன், பிளாக் பாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – B.வினோத் ஜெயின் – ஜாகுவார் ஸ்டூடியோஸ், கிரியேட்டிவ் புரட்யூசர் –  M.நரேஷ் ஜெயின், இசை – அருள்தேவ், கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு –  M.V.பன்னீர்செல்வம்.B.Sc, D.F.T, இயக்கம் –  J.பார்த்திபன் D.F.T.

இத்திரைப்படத்தின் மூன்று நாயகியர்களில் ஒருவராக நடித்திருப்பவர் நாய்ரா ஷா.

இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். நாய்ரா ஷா தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அவருக்கு குங்-ஃபூ கூட தெரியும்.

 தெலுங்குப் படங்களில் நடித்து வந்த இவர் இந்த ‘மிருகா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இளமையும், குறும்பும் பொங்கும் தன் அழகால் ரசிகர்களை அவர் வசம் இழுக்கப் போவது உறுதி.

இந்த மிருகா’ படத்தில் பாசமான தங்கை, அன்பான சித்தி, துள்ளலான மைத்துனி, குறும்பான காதலி… என எல்லாப் பரிமாணங்களிலும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார் நாய்ரா ஷா.

“படத்தில் புலியிடமிருந்து தன் சகோதரி மகளைக் காப்பாற்றப் போராடும் காட்சியே நாய்ரா ஷாவின் நடிப்புத் திறமைக்கு சாட்சி” என்கிறார் படத்தின் இயக்குநர்.

மேலும், “ஆபத்தான காட்சிகளில்கூட நாய்ரா ஷா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார். பத்தடி உயரத்தில் இருந்து வெறும் தரையில் குதித்தார். கால் தடுமாறி மாடிப் படிகளில் உருளும் காட்சியில் படத் தொகுப்புக்காக வெவ்வேறு கோணங்களில் பல ஷாட்கள் எடுக்கப்பட்டன. சிறிதும் முகம் சுளிக்காமல் தன் வலியை மறைத்தபடி நாய்ரா பல முறை படிகளில் உருண்டது வியப்புக்குரிய விஷயம்…” என்கிறது படக் குழு. 

Our Score