full screen background image

மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி உருவாகும் திரைப்படம்

மனித உரிமைகள் ஆணையத்தைப் பற்றி உருவாகும் திரைப்படம்

இந்திய சினிமாக்களில் சில திரைப்படங்களில் மனித உரிமைகள் ஆணையத்தின் மாண்பினையும் அதன் செயல்பாடுகளையும் பாராட்டி வசனங்களும், காட்சிகளும் அவ்வப்போது வந்து செல்வதுண்டு.

ஆனால், முதன்முறையாக முழுக்க, முழுக்க மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகளை மட்டுமே மையமாக வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாகிறது.

ரஃகிட்  ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் ‘சாலையோரம்’ திரைப்படத்தில் நடித்த ராஜவர்மன் நாயகனாகவும், கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற மதுரையைச் சேர்ந்த அம்சரேகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ஷர்மிளி, சென்றாயன், வையாபுரி, வினோதினி, மீரா இன்னும் சில புதுமுகங்களும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – வேலுச்சாமி இளையராஜா,  படத் தொகுப்பு – முத்துக் கோட்டீஸ்வரன், இசை – வாரென் vj சார்லி, பாடல்கள் – கவிஞர் சந்துரு,  கலை இயக்கம் – சம்பத் திலக், தயாரிப்பு நிர்வாகம் – செங்குட்டுவன். மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

திரைப்படக் கல்லூரி மானவரான ராஜா ஶ்ரீபத்மநாபன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

நாட்டில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் நடந்து நெஞ்சை பதற வைக்கும்போதெல்லாம் நீதிமன்றமும், மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன் வந்து (SUOMATO) வழக்கை விசாரிப்பது நடக்கிறது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும்போது இப்படி தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கை அதிகமாகக் காண முடிகிறது.

இது ஒரு வகையில் நீதித் துறை, மனித உரிமைகள் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைகிறது.

அந்த வரிசையில், ஒரு பெண்ணுக்கு நேரும் மனித உரிமை மீறல் மீதான சுயமான விசாரணையைப் பின்புலமாகக் கொண்டதுதான் இத்திரைப்படமும்.

படத்தின், நாயகிக்கு நேரும் அவலத்தை தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம், நீதியை நிலைநாட்டி மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட பெண் முன்பும் மாண்புடன் உயர்ந்து நிற்பதைப் பற்றிய கதைதான் இது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரை சுற்று வட்டாரத்தில் நடக்கவிருக்கிறது.

Our Score