full screen background image

விஜய் சேதுபதியும், தமன்னாவும் தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ டிவி நிகழ்ச்சி

விஜய் சேதுபதியும், தமன்னாவும் தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ டிவி நிகழ்ச்சி

‘Master Chef’ என்ற சமையல் கலை பற்றிய நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இங்கிலாந்தில் 1990-களில் துவங்கிய இந்த நிகழ்ச்சி இப்போதுவரையிலும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தியாவிலும் ‘ஸ்டார் பிளஸ்’ தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இதே நிகழ்ச்சி தமிழிலும் உருவாக்கப்படுகிறது. இது ‘சன்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தமிழின் மிக பிஸியான நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். விஜய் சேதுபதி சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு வருகிறார்.

ஏற்கெனவே ‘நம்ம ஊரு ஹீரோ’ என்னும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். இப்போது இந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதே நிகழ்ச்சி தெலுங்கில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அந்தத் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது விஜய் சேதுபதியும், தமன்னாவும் சந்தித்துக் கொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியைப் பெற்று ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சிக்குப் போட்டியாகவே இந்த நிகழ்ச்சியை தமிழாக்கம் செய்கிறது சன் தொலைக்காட்சி என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

Our Score