காஜல் அகர்வாலுக்குப் பதிலாக திரிஷா நடிக்கிறாரா..?

காஜல் அகர்வாலுக்குப் பதிலாக திரிஷா நடிக்கிறாரா..?

இந்தியன்-2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிகை திரிஷா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு சிக்கல்களுக்குப் பின்பு ‘இந்தியன்-2’ திரைப்படம் டிசம்பர் 2-வது வாரத்தில் மீண்டும் துவக்கப்படலாம் என்று தெரிகிறது.

வாரத்தில் சனிக்கிழமையைத் தவிர மற்ற தினங்களில் கமல் நடிக்கத் தயாராக இருப்பதால் அதற்கேற்றவாறு படப்பிடிப்பு நாட்களை திட்டமிட்டு வருகிறார்களாம்.

இதற்கிடையில் இந்த ‘இந்தியன்-2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை.

இதனால் இவருக்குப் பதிலாக நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. த்ரிஷா தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரணின் படத்தில் நடித்து வருவதால் அந்தத் தொடர்பில் அந்தப் படம் முடிந்தவுடன் இந்தப் படத்தின் ஷூட்டிங் என்ற ஒப்பந்தத்தில் அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.

த்ரிஷா ஏற்கெனவே கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாது இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார்.  அவரின் காட்சிகளும் முழுமையடையாததால், அந்த கதாபாத்திரத்திற்கு வேறொருவரை நடிக்க வைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. 

Our Score