full screen background image

பரபரப்பைக் கூட்டியிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ டீஸர்..

பரபரப்பைக் கூட்டியிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ டீஸர்..

Cameo Films தயாரிப்பில் தயாராகி வரும் “த்ரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் வெளியாகி இப்போதுவரையிலும் அதிகமான எண்ணிக்கையில் பகிரப்பட்டு வருகிறது. இளமை ததும்பும் இந்த கூட்டணி, அனுபவசாலிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.

DSC_8695

“த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி S தாணு, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் சரத்குமாரின் முன்னிலையில் வெளியிட்டார்.

DSC_8677 

“எனது முதல் கதையை தாணு ஸாரிடம்தான் சொன்னேன்.  இன்று எனது முதல் படத்தின் டீசரையும் அவரே வெளியிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சிக்கு கூடுதலாய் சரத்குமார் சாரும் வந்திருந்து எங்களை வாழ்த்தினார். தாணு சார் போல் தமிழ்த் திரையுலகில் பாராட்டுவதற்கு ஆளே இல்லை.  இவ்வகையில் ஒரு டீசர் வெளியிடுவது இதுவே முதல் முறை என அவர்கள் கூறக் கேட்டதும் பெருமகிழ்ச்சியாய் இருந்தது. இந்த டீசரில் இடம் பெற்றுள்ள ‘விர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாதுடி’ என்ற வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த டீசர் படத்திற்க்கான நல்ல ஒரு விளம்பரத் தளமாக அமைந்துள்ளது. ” என்றார் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’  படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். 

Our Score