‘கயல்’ ஆனந்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்..!

‘கயல்’ ஆனந்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்..!

பொங்கலுக்கு வெளியாகியுள்ள ‘டார்லிங்’ படத்தில் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அவருக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற்று தந்துள்ளது.

ரசிகர்களின் ‘டார்லிங்’காய் வலம்வரும் ஜி.வி. பிரகாஷ் அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ‘கயல்’ அனந்தியுடன் ஜோடி சேருகிறார்.

சமீபத்திய அறிமுகங்களில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் ஜி.வி. பிரகாஷ் குமாரும், ‘கயல்’ கதாநாயகி ஆனந்தியும் இந்தப் படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பைகூட வைத்திருக்கிறது.

Trisha Illana Nayanthara First Look Poster (2) 

இப்படத்தின் First look போஸ்டர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த படத்தில் உள்ள ஜி.வி.பிரகாஷ்குமாரின் வித்தியாசமான Get up பரவலாக பாராட்டையும் பெற்றது. வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் அதிக நபர்களால் பகிரப்பட்டு ட்விட்டரில் Trending ஆனது.

Cameo films நிறுவனம் சார்பில் சி .ஜே . ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பு நேற்று துவங்கியது. “ஒரு அப்பாவி இளைஞனின் காதலும் அதில் நடக்கும் முக்கியமான சம்பவங்களும்தான் இந்தப் படத்தின் கதை..” என்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். 

Our Score