ரிஷ்வின் வென்ஞ்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘மான்வேட்டை’.
இந்தப் படத்தில் ஷரண், தேஜஸ், பிரதீப், சுமன் ஷெட்டி ஆகியோர் ஹீரோக்களாகவும், சுனிதா கோகை, பிரியா, மாயா, வனிதா ஆகியோர் ஹீரோயின்களாகவும் அறிமுகமாகின்றனர்.
மரணம் இல்லாதவன் மரணத்தை பரிசாக தருவான் என்பதுதான் படத்தின் கதைக்கருவாம்.
படம் பற்றி பேசிய இயக்கருநர் திருமலை, “ஹீரோ ஷரண், தனது காதலி நிலாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். நிலாவை அழைத்துக் கொண்டு நிம்மதியை தேடி மனிதர்களே இல்லாத ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்கிறான். அப்போது அங்கு வரும் மனிதர்களால் இவர்கள் மிருகத்தனமாக கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட இவர்கள் மாபெரும் சக்தியாக மீண்டும் உயிர் பெறுகிறார்கள்.
சில நாட்களுக்கு பிறகு… நான்கு நண்பர்கள் தங்களின் காதலிகளோடு அந்த மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா வருகிறார்கள். இயற்கையை ரசித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது எதிர்பார்க்காமல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை..” என்றார்.
இதே கதைக்கருவில் பல பிசாசு படங்கள் இப்போது வந்து கொண்டிருப்பதால், அந்த லிஸ்ட்டில் இந்தப் படமும் இடம் பெறுகிறது..
தொழில் நுட்ப கலைஞர்கள் :
எழுத்து, இயக்கம் – M.திருமலைM.A
தயாரிப்பு – G.கிருஷ்ணகுமார், M.கமலக்கண்ணன்.
இசை – ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு – விஜய் வல்சன், ரதீஷ் கண்ணா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, ஏக்நாத்
படத்தொகுப்பு – சுதாகர்
வசனம் – விவேக்
சண்டைப்பயிற்சி – தளபதி தினேஷ்
ஒப்பனை – கர்ணன்
தயாரிப்பு மேற்பார்வை – S.வெங்கடேசன்
ஸ்டில்ஸ் – மணிவண்ணன்
மக்கள் தொடர்பு – நிகில்
லேப் – பிரசாத் லேப்
டிசைன்ஸ் – நாகபாபு