இன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் தாணு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் பதிவான 770 வாக்குகளில் 565 வாக்குகளை தாணு பெற்றுள்ளார். எதிர்த்து நின்ற ஏ.எல்.அழகப்பன் 127 வாக்குகளும், மன்சூரலிகான் 29 வாக்குகளும், ஹென்றி 21 வாக்குகளும், ‘கெட்டப்’ ராஜேந்திரன் 4 வாக்குகளும் பெற்றிருந்தனர். செல்லாத வாக்குகள் 22. 438 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் தாணு.
துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் பி.எல்.தேனப்பன் இருவரும் வெற்றி பெற்றுள்ளார். கதிரேசன் 484 வாக்குகளும், பி.எல்.தேனப்பன் 355 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த இருவரில் கதிரேசன் ஏ.எல்.அழகப்பன் அணியைச் சேர்ந்தவர். பி.எல்.தேனப்பன் தாணு அணியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே பதவிக்கு தாணு அணியில் போட்டியிட்ட கே.எஸ்.சீனிவாசன் 288 வாக்குகளும், ஏ.எல்.அழகப்பன் அணியில் போட்டியிட்ட ராஜன் 208 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
பொருளாளர் பதவிக்கு தாணு அணியின் சார்பாக போட்டியிட்ட சத்யஜோதி பிலிம்ஸ் ஜி.தியாகராஜன் 621 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து ஏ.எல்.அழகப்பன் அணியில் போட்டியிட்ட வெங்கடேஷ் 128 வாக்குகள் பெற்றார். செல்லாத வாக்குகள் 121.
ஏற்கெனவே சங்கத்தின் கவுரவச் செயலாளர்கள் பதவிக்கு டி.சிவாவும், முன்னாள் பொருளாளர் ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவி்க்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் :
1. தயாரிப்பாளர் ஆர்.கே.செல்வமணி – 463 வாக்குகள்
2. தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் – 429
3. தயாரிப்பாளர் கோவைத்தம்பி – 427
4. தயாரிப்பாளர் பவித்ரன் – 414
5. தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் – 411
6. தயாரிப்பாளர் வீ.சேகர் – 408
7. தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி – 401
8. தயாரிப்பாளர்-எடிட்டர் மோகன் – 400
9. தயாரிப்பாளர் நோஹன் – 400
10. தயாரிப்பாளர் செளந்தர் – 397
11. தயாரிப்பாளர் மன்னன் – 379
12. தயாரிப்பாளர் ஆர்.வி.உதயகுமார் – 375
13. தயாரிப்பாளர் விஜயமுரளி – 371
14. தயாரிப்பாளர் போஸ் – 371
15. தயாரிப்பாளர் ஆர்.மாதேஷ் – 356
16. தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் – 355
17. தயாரிப்பாளர் ஹெச்.முரளி – 332
18. தயாரிப்பாளர் ரிஷிராஜ் – 331
19. தயாரிப்பாளர் கபார் – 330
20. தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் – 319
21. தயாரிப்பாளர் நளினி சுப்பையா – 311
22. தயாரிப்பாளர் மனோஜ்குமார் – 308
செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் கலைப்புலி ஜி.சேகரன், ஆர்.வி.உதயகுமார் தவிர்த்து மீதமுள்ள அனைவருமே தாணு அணியைச் சேர்ந்தவர்கள்தான்.
மொத்தத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர் தாணுவின் கைகளுக்குச் சென்றுவிட்டது..!