‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ செப்டம்பர் 17-ல் வெளியாகிறது..!

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ செப்டம்பர் 17-ல் வெளியாகிறது..!

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் வரும் 17-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ச்சியான நான்கு விடுமுறை தினங்கள் வருவதால் இதில் காசை அள்ளிவிட நினைத்து பல பெரிய படங்களில் அன்றைக்கு வெளியாக நினைத்தன.

அதில் முக்கியமானது சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ திரைப்படம். ஆனால் இப்படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் கடன் தொல்லைகளை இன்றுவரையிலும் தீர்க்க முடியாத காரணத்தினால் பட ரிலீஸை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு இன்று தகவல் கொடுத்துள்ளனர்.

இத்தகவல் வெளியான உடனேயே அடுத்து லைனில் காத்திருந்த ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா பட்டென்று களத்தில் குதித்து தான் வாங்கி விநியோகம் செய்யும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை ரிலீஸ் செய்ய ஆயத்தமாகிவிட்டார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஆனந்தி, மனீஷா யாதவ் நடித்திருக்கின்றனர். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். பாடல்களை கபிலன் எழுதியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

ஆக, இந்த வருடம் விநாயக சதுர்த்தியன்று ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’,  கவுண்டமணி நடிக்கும் ‘49-ஓ’, நயன்தாரா நடிக்கும் ‘மாயா’, மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ஆகிய படங்கள் ரிலீசாவது உறுதியாகி விட்டது.

Our Score