full screen background image

‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்திற்கு கட்டிடத் தொழிலாளர்கள் அமைப்பு எதிர்ப்பு..!

‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்திற்கு கட்டிடத் தொழிலாளர்கள் அமைப்பு எதிர்ப்பு..!

எவர்க்ரீன் s.சண்முகம் தயாரிப்பில் ஆர்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு.’

anjukku onnu-posters-2

இதில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ, மேக்னா மற்றும் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  – நந்து, படத்தொகுப்பு  – வி . பழனிவேல், இசை – சாகித்யா.ஆர்,  பாடல்கள்  – கானா பாலா, தொல்காப்பியன், கவிக்குமார். நடனம் – தீனா, காதர், அருண்குமார்., ஸ்டில்ஸ்  – அருண், டிசைன்ஸ்   – சிவா, தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித், கே. ஆர். பழனியப்பன், மக்கள் தொடர்பு  – எம்.பி. ஆனந்த், இணை  தயாரிப்பு  – எஸ்.எஸ். ராஜ், தயாரிப்பு  –  எவர்கிரின் எஸ். சண்முகம், இயக்கம்  – ஆர்வியார்.

இந்தப் படத்தில் கட்டிடத் தொழிலில் தொழிலாளிகளாக இருக்கும் 5 பையன்கள் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கும் கதையைத்தான் படமாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் கட்டிட கூலி தொழிலாளர்கள், மேஸ்திரி, சித்தாள்கள், கொத்தனார் போன்றவர்களை கொச்சைப்படுவதைப் போல இருப்பதாக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்குமார் சில நாட்களுக்கு முன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதற்கு இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளர்களை அழைத்து பதில் சொன்னார்கள்.

அதில், எங்களுடைய ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்தில் சித்தாள் பெண்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதாக பொன்குமார் தவறான தகவலை பத்திரிக்கைகள் வாயிலாக சொல்லி வருவதற்கு நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

இப்படத்தை பார்க்காமலேயே தணிக்கைக் குழுவினரால் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை நீக்க சொல்வதற்கு பொன்குமாருக்கு என்ன உரிமை உள்ளது..? அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்குமானால்கூட பொன்குமார் தயாரிப்பாளரையோ அல்லது இயக்குநரையோ தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். அல்லது இயக்குநர் சங்கத்தையோ, திரையுலக சங்கங்களையோ தொடர்பு கொண்டு நியாயத்தை கேட்டிருக்கலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பத்திரிகை வாயிலாக திரைப்படத்தை விமர்சிப்பதற்கும், தடை செய்ய சொல்வதற்கும் பொன்குமார் யார்..? பொன்குமார் இப்படி ஒரு விமர்சனத்தை வைக்க என்ன காரணம். சுய விளம்பத்திற்காக திரைப்படத்தை விமர்சிக்கிறாரா… இல்லை தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயலுகிறாரா…?

இந்தப் பொய்யான பரப்புரை செய்தியால் படத்தின் ரிலீஸின்போது எதிர்மறையான விமர்சனங்கள் ஏற்பட்டு படத்திற்கு வசூல் பாதிப்பு குறைந்தால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை பொன்குமார் ஏற்றுக் கொள்வாரா? எதற்காக பொய்யான விமர்சனத்தை அவர் வெளியிட வேண்டும்.?

இத்திரைப்படம் வெளியிடுவதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கையில் இவருடைய விளம்பரத்தால் இப்போது வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இப்படியே ஒவ்வொரு இயக்கமும் காரணமே இல்லாமல் போர்க்கொடி தூக்கினால் திரைப்படத் துறையின் நிலை என்ன..? திரைப்பட துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை என்ன..? இத்தொழிலை நம்பி பணம் முதலீடு செய்யும் முதலாளியின் நிலை என்ன..?” என்று சராமரியாக கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.

வர, வர சமூகத்தில் நாட்டாமைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள். திரைப்படத் துறை எத்தனை தொல்லைகளைத்தான் சமாளிக்கும்..? கஷ்டம்தான்..!

Our Score