பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கிறார்.
‘Production No8’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘சதுரம்-2’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும், நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – பிரவீன், இசை – போபோ சசி, படத் தொகுப்பு – ராகுல், கலை இயக்கம் – துரைராஜ், நிர்வாகத் தயாரிப்பு – R.முரளி கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – சதீஷ்.
Our Score