மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அனைத்து படப்பிடிப்புகளையும், ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
நாளை காலை 9 மணிக்கு அடையாறு இல்லத்தில் இருந்து எம்.எஸ்.வியின் இறுதி ஊர்வலம் கிளம்பும் என்றும். காலை 10 மணிக்கு பெசண்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் எம்.எஸ்.வி.யின் மகன்கள் தெரிவித்துள்ளனர்.
அது சமயம் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் கோரஸாக இசையமைத்து இந்த இசை மாமேதைக்கு தங்களது இறுதி அஞ்சலியை தெரிவிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.