full screen background image

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி.க்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – திரையுலக அமைப்புகளுக்கு கோரிக்கை

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி.க்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – திரையுலக அமைப்புகளுக்கு கோரிக்கை

தமிழ்த் திரையுலகத்தினருக்கு எமது வேண்டுகோள் :

காலத்தால் அழிக்க முடியாத இசை சகாப்தத்தை உருவாக்கி தமிழ் இசையுலகத்திற்கு இந்திய அளவில் ஒரு தனித்த இடத்தை முதன்முதலில் உருவாக்கித் தந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாதான்.

இன்றுவரையிலும் இரவு நேரங்களில் தனது சாகாரவரம் பெற்ற இசையினால் கோடிக்கணக்கான தமிழர்களை தூங்க வைப்பவரும், தாலாட்ட வைப்பவரும் அவர்தான்..!

அவர் உயிருடன் இருக்கும்போதாவது அவருக்குரிய பட்ட்ங்களையும், பெருமைகளையும் இந்தத் தமிழ்த் திரையுலகம் அவருக்கு வாங்கித் தர முடியவில்லை. கடைசியாக இந்த இறப்பின் போதாவது அவருக்கு உரிய மரியாதையை தமிழ் சினிமா அமைப்புகள் எம்.எஸ்.வி. ஐயாவுக்கு பெற்றுத் தர வேண்டும்.

எம்.எஸ்.வி. ஐயா சாதாரண மனிதர் அல்லர். அசாத்தியமான கலைஞர். இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும் அளவுக்கு தனது இசையினால் இசைத் துறையை வள்ர்த்தெடுத்திருக்கிறார்.

இந்த மாமனிதரின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படுவதுதான் அந்த மனிதருக்கு இந்த தமிழகமும், தமிழக அரசும், தமிழ் மொழியும், தமிழிசையும் செய்யும் மிகப் பொருத்தமான, கடைசியான மரியாதையாக இருக்கும்.

ஆகவே, தமிழ் திரைப்பட அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நமது திரையிசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அரசு மரியாதை கிடைக்கச் செய்து அதன் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கும், அந்த மாமேதைக்கும் ஒரு கவுரவத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இது திரையுலக முக்கியஸ்தர்களின் கடமையுமாகும்.

ஏற்கெனவே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மறைந்தபோது அவருக்கு அப்போதைய தமிழக அரசு போலீஸ் மரியாதை அளித்து கவுரவப்படுத்தியதை இங்கே நினைவு கூர்கிறோம்.

செய்வீர்களா தோழர்களே..?!

Our Score