full screen background image

இன்றைய ரிலீஸ் படங்கள் – மே-9, 2014

இன்றைய ரிலீஸ் படங்கள் – மே-9, 2014

‘கோச்சடையான்’ வழிவிட்டதால் இன்றைக்கு ‘யாமிருக்க’ பயமே திரைப்படம் அடித்துப் பிடித்து ரிலீஸாகியுள்ளது. உடன் ‘அங்குசமும்’ வெளிவந்துள்ளது. இதுவும் தவிர 2 ஆங்கில டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.

1. அங்குசம்

Agusam-poster

Manusree Film International  சார்பில் மனுக்கண்ணன் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் படம் இது. இதில் புதுமுகம் ஸ்கந்தா ஹீரோ. ஜெயந்தி குஹா அறிமுக ஹீரோயின். ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். தீபக்குமார்-திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்திருக்கிறார்.

சென்ற வருடமே சென்சார் செய்யப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த படம். வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரீலீஸாக முடியாமல் தவித்த படம். உண்மையாகவே இது அனைவரும் பார்க்க வேண்டிய படம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டும்வகையில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2. யாமிருக்க பயமே

Yaamirukka Bayamey Movie Posters

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரிக்கும் படம் ‘யாமிருக்க பயமே’. இதில் நாயகனாக கிருஷ்ணா, நாயகியாக ரூபா மஞ்சரி நடித்திருக்கின்றனர். மற்றும் கருணா, ஓவியா, நளினிகாந்த், மயில்சாமி, ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை டீகே இயக்குகிறார். ராமி ஒளிப்பதிவை செய்திருக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். காமெடி திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஜூன் 6-ம் தேதி வெளியாகும் என அறிவித்த படக் குழுவினர் கோச்சடையானின் பின் வாங்கலுக்கு பிறகு உடனடியாக தீயாய் வேலை செய்து  இன்று வெளியிட்டுள்ளனர்.

3. Shark in Desert என்ற ஆங்கிலத் திரைப்படம் ‘பாலைவனத் திமிங்கலம்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.

4. The Tower என்ற ஆங்கிலத் திரைப்படம் அதே பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.

நாளைய தினம் மே 10, சனிக்கிழமையன்று ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

Our Score