இன்று 2015 மே 22 வெள்ளியன்று 6 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.
1. திறந்திடு சீசே
சுதாஸ் புரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிக்கும் இந்த ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நிமேஷ் வர்ஷன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய்யின் படத் தொகுப்பில், மோகன்ராஜின் பாடல் வரிகளுக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.
தயாரிப்பாளர் வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு, கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார். மேலும் தன்ஷிகா, அஞ்சனா கீர்த்தி, சி.எஸ்.கே. புகழ் நாராயணன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2. கமரகட்டு
ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீதக்ஷா இன்னோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன.
இதில் யுவன், ஸ்ரீராம், ரக்சாராஜ், மணிஷாஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் பக்கோடா பாண்டி, கிரேன் மனோகர், வாசுவிக்ரம், பாலாசிங் சேத்தன், அங்காடி தெரு சிந்து, தளபதி தினேஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – ஆர்.ஸ்ரீதர், எடிட்டிங் – எஸ்.சதீஷ், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், ஹரி தினேஷ், நடனம் – சிவாஜி, விஜய் சிவசங்கர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
3. விந்தை
‘அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம்’ சார்பில். R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
இதில் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடித்திருக்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர் மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, கவுதமி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரத்தீஷ்கண்ணா, இசை – வில்லியம்ஸ், பாடல்கள் – பாரதி, பொன்முத்துவேல், கலை – பத்து, எடிட்டிங் – நதி புயல், நடனம் – தினா, தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ரெட்டி, நிர்வாக தயாரிப்பு – பொன்ராஜ், இணை தயாரிப்பு – R.Y.ஆல்வின், R.Y.கெவின், தயாரிப்பு – R.L.யேசுதாஸ், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – லாரா.
4. நண்பர்கள் நற்பணி மன்றம்
ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடித்திருக்கிறார். மற்றும் அன்பாலயா பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, ரவி மரியா, சார்மிளா, முத்துக்காளை இவர்களுடன் முக்கிய வேடத்தில் இயக்குநர் ராதாபாரதியும் நடித்திருக்கிறார்.
கலை – பத்மநாப கதிர், ஒளிப்பதிவு – வி.செல்வா, இசை – ஸ்ரீகாந்த்தேவா, எடிட்டிங் – லான்சிமோகன், பாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி, கவிபாஸ்கர், நடனம் – சஞ்சய்கண்ணா, தயாரிப்பு நிர்வாகம் – பழனியப்பன், ரஞ்சித், தயாரிப்பு மேற்பார்வை – ராதாகண்ணன், இணை இயக்குனர் – சங்கர்சாரதி, தயாரிப்பு – சி.மாதையன், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – ராதாபாரதி.
5. டிமான்ட்டி காலனி
மோகனா மூவிஸ் நிறுவனமும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ள படம் இது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றிய அஜய் ஞானமுத்து இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இதில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், அரவின்சிங், கேபாஜெரமியா, புவன் சீனிவாசன், டி.சந்தானம், ஆர்.சங்கர், பூர்த்தி பிரவின், ராம் வைத்தீஸ்வரன், ஜி, அருண்பாண்டியன், நா. முத்துகுமர், அருண்ராஜா காமராஜ், அருண் சீனு, எம். பாஸ்கரன் ஆகிய தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
6. சிறுவாணி
கோவை மருதமலை பிலிம்ஸ் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் ரகுநாத் இப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். மிதுன் மற்றும் ஐஸ்வரி ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். தேவா இசையமைத்திருக்கிறார். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ரகுநாத்.