full screen background image

தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க வரும் மே – 27–ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று ஒரு அவசரச் செய்தியை வெளியிட்டுள்ளது.

“தமிழ்நாடு அரசின் சார்பில் 2013–ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள், 2013–ம் ஆண்டிற்கான சின்னத்திரை விருதுகள், 2011, 2012 மற்றும் 2013–ம் ஆண்டுகளுக்கான திரைப்பட மானியம் வழங்குவதற்கு தகுதியுடைய சிறந்த தமிழ் திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணிவரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்கவேண்டும் என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் நாளை வரும் மே, 27–ம் தேதி அன்று மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைந்திருக்கும் திரைப்படத் துறையினர் நலவாரிய அலுவலகத்தில் வரும் 27–ம் தேதி மாலை 5 மணிவரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) பெறப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விதிமுறைகள் பற்றிய செய்திகளுக்கு கீழ்க்கண்ட இணைப்புகளில் இருக்கும் செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

https://www.tamilcinetalk.com/tamilnadu-goverment-cinema-awards-of-2013-year/

https://www.tamilcinetalk.com/best-serial-awards-of-tamilnadu-govt-for-the-year-2013/ 

Our Score