full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – மே -1, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – மே -1, 2015

இந்த வாரம் 2015, மே 1-ம் தேதி வெள்ளிக்கிழமை 1 நேரடி தமிழ்ப் படமும், மே -2-ம் தேதி சனிக்கிழமையன்று 1 நேரடி தமிழ்ப் படமும் ரிலீஸாகியுள்ளன.

1.வை ராஜா வை (மே 1-ம் தேதி ரிலீஸ்)

vai-raja-vai-poster

ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக், டேனியல், மனோபாலா, இயக்குநர் வஸந்த் சாய் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தனுஷும், எஸ்.ஜே.சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் இயக்கியிருக்கிறார்.

2. உத்தமவில்லன் – (மே 2-ம் தேதி ரிலீஸ்)

uthamavillan-kamal

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கிறது.

இதில் கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு ஷம்ஷத், இசை – ஜிப்ரான், எடிட்டிங் – விஜய் சங்கர், கலை – லால்குடி இளையராஜா, காஸ்ட்யூம் டிஸைனர் – கவுதமி, கதை-திரைக்கதை –கமல்ஹாசன், இயக்கம் – ரமேஷ் அரவிந்த்.

Our Score