2014, ஜூன் 27 வெள்ளிக்கிழமையான இன்றைக்கு 4 நேரடி தமிழ்ப் படங்களும், 2 தெலுங்கு டப்பிங் படங்களும் வெளியாகியிருக்கின்றன.
1. சைவம்
இயக்குநர் ஏ.எல்.ஏ.விஜய்யின் அப்பா ஏ.எல்.அழகப்பன் தயாரித்திருக்கும் படம். விஜய் இயக்கியிருக்கிறார். நாசரும், குட்டிப் பொண்ணு சாராவும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய.. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். எடிட்டிங் ஆண்டனி. இன்றைக்கு வந்த படங்களில் முக்கியமான படமாக இதுவே கருதப்படுகிறது.
2. என்ன சத்தம் இந்த நேரம்
ஏவிஏ புரொடெக்சன்ஸ் நிறுவனமும், ஆர்பிபி பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சிறுமிகள் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ஜெயம் ராஜாவும், நடிகை மானுவும் உடன் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எடிட்டிங் வி.டி.விஜயன். ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கிறார். குரு ரமேஷ் இயக்கியிருக்கிறார்.
3. தனுஷ் 5-ம் வகுப்பு
கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் வி.இளங்கோவன் தயாரித்திருக்கிறார். கதாக திருமாவளவன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு சிவசங்கரன். பீட்டர் பாபியா இசையமைத்திருக்கிறார். புதுமுக நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
4. அதிதி
மலையாளத்தில் வெளிவந்த காக்டெயில் என்ற படத்தின் தமிழ் ரீமேக். நந்தா, அனன்யா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். Spellbound Films inc சார்பில் கே.பி.ராதாகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கிறார். பரதன் இயக்கியிருக்கிறார்.
5. இனி ஒரு விதி செய்வோம்
இதுவொரு தெலுங்கு டப்பிங் படம். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும், சார்மியும் நடித்திருக்கிறார்கள்.
6. மீண்டும் அம்மன்
கோடி ராமகிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படம் தெலுங்கு டப்பிங் படம். சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அம்மன் படம் போலவே மீண்டும் அம்மன் என்ற பெயரில் படம் இயக்கியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா. இதில் பானுப்ரியா அம்மனாக நடித்திருக்கிறார்.