ராஜமெளலியின் ‘பாஹூபலி’யில் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் தமன்னா..!

ராஜமெளலியின் ‘பாஹூபலி’யில் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் தமன்னா..!

பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் அனுஷ்கா நடிப்பில், S.S.ராஜமௌலி இயக்கத்தில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘பாஹுபலி’ படத்தில் நடிகை தமன்னாவும் நடிக்கிறார். இந்த மாதம் நடந்த படபிடிப்பில் தமன்னா கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மற்றும் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் ஆகிய இடங்களில் இப்படத்திற்கென சிறப்பாக பிரம்மாண்ட செட்களை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபுசிரில் அமைத்துள்ளார். படத்திற்கு இசையை M.M.கீரவாணியும், ஒளிப்பதிவை செந்திலும் மேற்கொள்கின்றனர். சிறிது இடைவேளைக்கு பிறகு படபிடிப்பை தொடங்கும் படக்குழு இவ்வருடம் இறுதிவரை படபிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரபல இயக்குனர் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை 2015 ஆம் வருடம் கோடைக்காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். படங்களில் வரும் போர்க் காட்சிகளில் சர்வதேச தரத்தில் உருவாகும் படங்களுக்கு கிராபிக்ஸ் அமைக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score