விஜய்சேதுபதியின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் கன்னட ரீமேக் படம் ‘எடக்கு’..!

விஜய்சேதுபதியின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் கன்னட ரீமேக் படம் ‘எடக்கு’..!

நேற்றைய தினசரிகளில் திடீரென்று விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் என்பதுபோல 'எடக்கு' என்றொரு படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது..! இதென்னடாது நமக்குத் தெரியாமல்.. இது மாதிரியான டைட்டிலில் விஜய் சேதுபதி இருக்கிறாரே என்று விசாரித்தால்..?!

இது விஜய்சேதுபதி 7 வருடங்களுக்கு முன்பு நடித்த ஒரு கன்னடப் படமாம். இப்போது விஜய்சேதுபதிக்கு தமிழில் இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து இந்தப் படத்தை தமிழில் டப்பிங்  செய்துள்ளதாம் ஒரு தயாரிப்பு நிறுவனம்.

ஆனால் இந்த படத்தில் நான்கே, நான்கு காட்சிகளில்தான் விஜய் சேதுபது நடித்திருக்கிறாராம். அதுவும் வில்லனின் கையாளாக வருகிறாராம்.

ஏற்கனவே 'ரம்மி' படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்த விஜய்சேதுபதியை, ஹீரோவே அவர்தான் என்று முன்னிறுத்தி விளம்பரப்படுத்தியதால், அந்தப் படம் தோல்வி அடைந்து விஜய்சேதுபதிக்கும் கெட்ட பெயர் உண்டாகியது. மீண்டும் இப்போது அவரின் பெயரை வைத்து  4 காட்சிகளில் வரும் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்பதுபோல இப்படி விளம்பரம் செய்திருக்கிறார்கள். .

இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.... தமிழில் விஜய்சேதுபதிக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறாராம்.!

நல்லாயிருக்கும் தமிழ்ச் சினிமாவை கெடுப்பது இது போன்ற போலி தயாரிப்பு நிறுவனங்கள்தான்..! ரசிகர்கள் முழித்துக் கொள்ள வேண்டும்..!

விஜய்சேதுபதியே முன் வந்து இந்தப் படம் பற்றிய தகவல்களை சொல்லிவிடுவது அவருக்கும் நல்லது. அவருடைய ரசிகர்களுக்கும் நல்லது..!