இன்று 2015, ஜூலை 3-ம் தேதி வெள்ளியன்று 5 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் வெளியாகியிருக்கின்றன.
1. பாபநாசம்
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் இது. கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், ஆஷா சரத், காலாபாவன் மணி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், சாந்தி வில்லியம்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்கம் செய்திருக்கிறார். இசை – ஜிப்ரான். பாடல்கள் – நா.முத்துக்குமார். எடிட்டர் – அயூப்கான். எழுத்து-இயக்கம் – ஜீத்து ஜோஸப்.
2. பாலக்காட்டு மாதவன்
எஸ்எஸ்எஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் எஸ்.சஞ்சீவ் தயாரித்திருக்கிறார். இதில் விவேக் ஹீரோவாக நடிக்க சோனியா அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஷீலா, மனோபாலா, செல்முருகன், இமான் அண்ணாச்சி, ஆர்த்தி, சுவாமிநாதன், பாண்டு, டி.பி.கஜேந்திரன், கிரேன் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாடல்களை இளையகம்பன், தனு கார்த்திக், விவேக் எழுதியிருக்கிறார்கள். ராஜகோபால் எடிட்டிங் செய்திருக்கிறார். எம்.சந்திரமோகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
3. ஒரு தோழன் ஒரு தோழி
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் மனோ தீபன், மினிஷ் கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடிக்க, அஸ்திரா, அபிநிதா இருவரும் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். ‘ஹலோ’ கந்தசாமி மிக முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – சிவன்குமார், இசை – ஜெய் சுரேஷ், படத்தொகுப்பு – கிருத்திகா, பாடல்கள் – மோகன் ராய், பெ.மோகன், மாகாதாரா, தயாரிப்பு மேற்பார்வை – மகாதாரா, தயாரிப்பு – கிருத்திகா, ராஜேஷ், பால்டிப்போ கதிரேசன், எழுத்து – இயக்கம் – பெ.மோகன்.
4. பரஞ்சோதி
ஐ.பி.எல். சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் சாரதி, நாயகனாக அறிமுகமாகியுள்ளார். நாயகியாக ‘திரிஷ்யம்’ புகழ் அன்சிபா நடிக்கிறார். கஞ்சா கருப்பு முக்கிய வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தில், விஜயகுமார், கீதா, மயில்சாமி, சிங்கமுத்து, முத்துக்காளை, ஷகிலா, சங்கர்குரு ராஜா, மீராகிருஷ்ணன், போஸ் வெங்கட், பாலாசிங், சண்முகசுந்தரம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சபேஷ்-முரளி இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுதாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். வினோத் கலை இயக்கம் செய்கிறார். என்.கோபாலகிருஷ்ணன், என்.தமிழ்செல்வன், என்.மணிகண்டன் ஆகியோர் இணை தயாரிப்புப் பணியை மேற்கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்கியுள்ளார்.
5. பேபி
RK Entertainment மற்றும், Sri Annamalaiyaar Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இதில் சாத்தன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகிய இரண்டு சிறுமிகள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். மேலும் மனோஜ் பாரதிராஜா ஷைரா கார்க் இருவரும் நடித்திருக்கின்றனர். சதிஷ், ஹரீஷ் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு இயக்கம் டி.சுரேஷ்.
6. டெர்மினேட்டர்