இன்று ஜனவரி 30, 2015 வெள்ளிக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. தரணி
மெலடி மூவீஸ் சார்பில் வி.ஜி.எஸ்.நரேந்திரன் தயாரித்திருக்கிறார். இதில் ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா, சண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ஆர்.பிரகாஷ், வினோத்காந்தி. இசை – B.என்சோன். குகன் சம்பந்தம் இயக்கியுள்ளார்.
2. இசை
இதில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி, அழகம்பெருமாள், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – எஸ்.செளந்தர்ராஜன். எடிட்டிங் – கே.எம்.ரியாஸ். சண்டை பயிற்சி – கனல் கண்ணன். சுப்பையா தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
3. டூரிங் டாக்கீஸ்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, ஏ.வெங்கடேஷ், அபி சரவணன், பாரி கோஸ், ஹேமமாலினி, சுனு லட்சுமி, அஸ்வின், காயத்ரி, ஆடுகளம் ஜெயராமன், ரோபோ சங்கர், செவ்வாழை ராசு, சாய்கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய.. ஸ்ரீகர் பிரசாத் மற்றும் எம்.ஆர்.ரெஜீஸ் இருவரும் எடிட்டிங் செய்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். வசனத்தை கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.