இன்று 2014, டிசம்பர் 12 வெள்ளியன்று மூன்று நேரடி தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. லிங்கா
சூப்பர்ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்திருக்கும் படம். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, ஜெகபதிபாபு, சந்தானம், கருணாகரன், விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருக்கிறார்.
2. இன்னுமா நம்பள நம்புறாங்க
எஸ்.ஆர்.பாலாஜி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். முற்றிலும் புதுமுகங்களே நடித்திருக்கும் சின்ன பட்ஜெட் படம் இது.
3. யாரோ ஒருவன்
நவகிரஹா சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, ஒரியன், சான்ரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அமைத்து இயக்கியிருக்கிகிறார் கே.என்.பைஜூ.