‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து அதிக படங்களை தயாரித்து வெற்றி பெற்ற நிறுவனம் ‘தேவர் பிலிம்ஸ்’. அந்த வரிசையில் மக்களின் எதார்த்த வாழ்வியலை பிரதிபலிக்கும் கதைகளை தயாரிக்க களமிறங்கியிருக்கிறது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மயில்தேவர் பிலிம்ஸ்’.
‘மயில்தேவர் பிலிம்ஸ்’-ன் உரிமையாளரான Dr.K.C.பிரபாத், கடந்த பத்தாண்டுகளாக தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். மேலும், இவரது குடும்பம் நாடக பாரம்பரியமிக்க குடும்பமாகும். அதன் காரணத்தினாலேயே இவரது தந்தைக்கு திரு.சின்னப்பத்தேவர் என்று பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
‘மயில்தேவர் பிலிம்ஸ்’ தயாரிக்கும் தனது முதல் படத்திற்க்கு ‘மருதாண்ட சீமை’ என்கிற வீரமிக்க தலைப்பை சூட்டியிருக்கிறார்கள்.
அரசு விடுதியில் வாழும் மாணவர்களின் வாழ்க்கையை தனது முதல் படமான ‘அரும்பு மீசை குரும்புப் பார்வை’–யில் பதிவு செய்த இயக்குநர் வெற்றி மகாலிங்கம்,. தன் இரண்டாவது படமான ‘வெண்நிலா வீடு’ மூலமாக கிராமத்திலிருந்து நகரத்துக்கு புலம்பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்வியலை பதிவு செய்தார்.
தற்போது, விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் இந்த நான்கு மாவட்டங்களும் சந்திக்கும் இடத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை தனது மூன்றாவது படமான இந்த ‘மருதாண்ட சீமை’–யில் பதிவு செய்யவிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.
இந்தப் படத்தில் முன்னனி தொழில் நுட்பக் கலைஞர்களும், பிரபல நடிகர்- நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பாடல் பதிவுடன் தொடங்கியது. படத்தின் படபிடிப்பு தென் மாவட்டங்களில் ஒரே கட்டமாக நடந்து முடியவிருக்கிறது. இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படம் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.