இன்று 2015 ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமையன்று 5 நேரடி தமிழ்ப் படங்களும் 2 டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.
வந்தா மல
Geiger Porductions சார்பில் எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இதில் தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், பிரியங்கா, வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சாம் டி.ராஜ் இசையமைத்திருக்கிறார். மாரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் இகோர்.
சண்டி வீரன்
பாலாவின பி ஸ்டூடியோஸ் சார்பில் அவர் தயாரித்திருக்கும் படம். இதில் அதர்வா, ஆனந்தி ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் ராஜி, லால், மல்லிகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருணகிரி இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஏ.சற்குணம்.
குரங்கு கைல பூ மாலை
எஸ்.ஏ. புரொடெக்சன்ஸ் சார்பில் கே.அமீர்ஜான் தயாரித்திருக்கிறார். ஜெகதீஷ், கவுதம் கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக சாந்தினி மற்றும் நிஷா, சரவண சுப்பையா, கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
மாயன் ஒளிப்பதிவு செய்ய சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். சாய் குருநாத் இசையமைத்திருக்கிறார். பாடல்களை பாலு நாராயணன், மோகன்ராஜன், குரு. அய்யாத்துரை, என். இதயா ஆகியோர் எழுதியிருக்கின்றனர். குரு.அய்யாத்துரை, நீல்சன், வல்லவன் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.கிருஷ்ணன்.
கலைவேந்தன்
எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரித்திருக்கிறார். கதாநாயகனாக அஜய், கதாநாயகியாக சனம்ஷெட்டி நடித்திருக்கிறார்கள். மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், ‘காதல்’ சுகுமார், ஆர்த்தி, சம்பத், நளினி, ‘தலைவாசல்’ விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவனும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
ஒளிப்பதிவு – எஸ்.கார்த்திக், பாடல்கள் – சினேகன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங் – G. சசிகுமார், ஸ்டண்ட் – சையத், நாக்கவுட் நந்தா, நடனம் – சாந்திகுமார், தயாரிப்பு நிர்வாகம் – இளையராஜா, மாரியப்பன் ,செல்வம், தயாரிப்பு – எஸ்.கமலகண்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.கே.பரசுராம்.
அழகே இல்லாத அழகான கதை
முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். சாமிநாதன் இயக்கியிருக்கிறார்.
செல்வந்தன்
ஸ்ரீமந்துடு என்கிற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம். மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். கொரட்டலா சிவா இயக்கியிருக்கிறார்.
முரட்டு தேசம்
Mission Impossible –ஆங்கில டப்பிங்