இன்று 2015, செப்டம்பர் 17, வியாழக்கிழமையன்று 3 நேரடி தமிழ்ப் படங்களும், 2 ஆங்கில டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.
1. 49-ஓ
Zero Rules Entertainment Private Limited நிறுவனத்தின் சார்பில் டாக்டர் எல்.சிவபாலன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் ஜெயபாலன், திருமுருகன், பாலாசிங், குரு சோமசுந்தரம், நான் கடவுள் ராஜேந்திரன், மூணார் ரமேஷ், சாம்ஸ், வைதேகி, விசாலினி, அல்வா வாசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆதி கருப்பையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே இசையமைத்திருக்கிறார். பரமேஷ் கிருஷ்ணா எடிட்டிங் செய்திருக்கிறார். ஏ.பழனிவேல் கலை இயக்கம் செய்ய, ஆர்.சங்கம் நடனம் அமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருப்பவர் பி.ஆரோக்கியதாஸ்.
2. மாயா
பொட்டன்ஷியல் கம்பெனி சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் ஆரி, நயன்தாரா, லட்சுமிபிரியா, அம்ஜத்கான், ரேஷ்மி மேனன், மைம் கோபி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய ரான் எதன் யோஹன் இசையமைத்திருக்கிறார். குட்டி ரேவதியும், உமா தேவியும் பாடல்களை எழுதியுள்ளனர். டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். தா.ராமலிங்கம் கலை இயக்கம் செய்திருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் படத்தை அஷ்வின் சரவணன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
3. த்ரிஷா இல்லனா நயன்தாரா
‘Cameo films’ நிறுவனத்தின் சார்பில் சி.ஜே. ஜெயகுமார் தயாரித்திருக்கிறார். இதில் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார், ‘கயல்’ ஆனந்தி, மணிஷா யாதவ், பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
Everest (ஆங்கில டப்பிங் படம்)
Survivor (ஆங்கில டப்பிங் படம்)