இன்று 2015 ஜூன் 12 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.
இனிமே இப்படித்தான்
ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடித்திருக்கின்றனர். மேலும், தம்பி ராமையா, பெப்சி விஜயன், பிரகதி, நரேன், V.T.V. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
புதுமுக இயக்குநர்களான இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் ‘முருகானந்த்’ என்ற பெயரில் இயக்கி தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்கள்.
ரோமியோ ஜூலியட்
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்.’ இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி-பூனம் பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
வசனம் – சந்துரு, பாடல்கள் – மதன்கார்க்கி, தாமரை, இசை – D.இமான், கலை – மிலன், நடனம் – ஷெரீப், ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், எடிட்டிங் – ஆண்டனி, தயாரிப்பு நிர்வாகம் – ரமணா , A.K.கார்த்திக், தயாரிப்பு மேற்பார்வை – K.K.ரவி, தயாரிப்பு வடிவமைப்பு – A.K.சேகர், தயாரிப்பு – எஸ். நந்தகோபால், கதை, திரைக்கதை, இயக்கம் – லட்சுமண்.