‘டிக் டாக்’ புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தை இயக்குநர் கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார். ஆல்பின் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவர்ச்சி நடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.
இலக்கியாவுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி நடிகர் அருண்குமார் பேசும்போது, “சினிமாவை வெளியில் இருந்து பார்க்கும்போது சுலபமாகத்தான் தெரியும். நடிப்பதெல்லாம் ஈஸியாகத்தான் தோன்றும். ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் இந்த ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்தில் நடித்தபோதுதான் அதை உணர்ந்தேன்.
இப்படத்தில் நடிக்கும்போது எனக்கும் முதலில் தயக்கம் இருந்தது. சில நடைமுறைத் தடைகள் இருந்தன. இது சில நாட்களில் சரியாகி விட்டது. இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.
இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன. இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ் பெற்றவர். அவருக்கும் இது முதல் படம். எனக்கும் இது முதல் படம். எனவே, எங்கள் இருவருக்குமே ஆரம்பத்தில் சில தயக்கங்கள், மனத் தடைகள் இருந்தன. ஆனால், அவைகள் போகப் போக சரியாகிவிட்டன.
நான் இப்போது எனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விட்டேன். எனது அடுத்த படத்தில் மொத்தம் 5 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். அதில் இலக்கியாவும் ஒருவர் என்பது உறுதி…” என்றார்.