‘டாக்டர்’, ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுக்கும், சூர்யாவுக்கும் ஜோடியாக நடித்துப் பெயர் பெற்ற நடிகையான பிரியங்கா மோகன், தனது திரையுலகத்தின் துவக்கக் காலத்தில் நடித்த மற்றுமொரு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
எம்.கே.எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதன்குமார் தயாரித்த ‘டிக் டாக்’ படத்தில்தான் பிரியங்கா மோகன் ஒரு நாயகியாக நடித்துள்ளார்..!
இந்தப் படத்தில் ராஜாஜி நாயகனாகவும், சுஷ்மா ராஜேந்திரா இன்னொரு நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் முருகானந்தம், சாம்ஸ், நமோ நாராயணா , வினோதினி, சஞ்சனா சிங், மதுசூதனன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
டோனி செயின் மற்றும் முருகன் செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவையும், ரொசாரியா இசையையும், ராஜேஷ் செல்வராஜ் படத் தொகுப்பையும், பிரபு சதீஷ் நிர்வாக தயாரிப்பையும், சுரேஷ் மாரிமுத்து இணை தயாரிப்பையும், பிரபு சதீஷ் இணை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். தயாரிப்பாளர் மதன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த ‘டிக் டாக்’ படத்தின் “தூரிடாதே” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










