full screen background image

ஜி.வி.பிரகாஷ்-இவானா நடித்திருக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவாகியுள்ளது!

ஜி.வி.பிரகாஷ்-இவானா நடித்திருக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவாகியுள்ளது!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவாகியுள்ளது..!

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில் இந்த நிறுவனத்தின் அடுத்தத் தயாரிப்பாக, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் நக்கலைட்ஸ்’ டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு, தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – பி.வி.ஷங்கர், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – என்.கே.ராகுல், சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன், கதை – ரமேஷ் ஐயப்பன் | பி.வி.சங்கர், திரைக்கதை – பி.வி.ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன், வசனம் – ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர், கூடுதல் திரைக்கதை – SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன், நிர்வாக தயாரிப்பாளர் – பூரணேஷ், தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ்.ஸ்ரீதர், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி. துரை, பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம், ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு, ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் – சுபியர், ஒப்பனை – வினோத் சுகுமாரன், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா | ரேகா, டி’ஒன், விளம்பர வடிவமைப்பு – வின்சி ராஜ்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா, ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் ரேவா பேசும்போது, “அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு சார், பிவி ஷங்கர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி.

இந்தக் ‘கள்வன்’ படத்திற்கு பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது. இந்தப் படத்தின் கதை மூலம் இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

Our Score