full screen background image

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ பூஜையுடன் தொடங்கியது..!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ பூஜையுடன் தொடங்கியது..!

விஷால் நடிப்பில் தற்போது ‘கத்தி சண்டை’ படம் உருவாகிவரும் நிலையில், இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்தப் படத்தில் விஷால் போலீஸ் ஆபீஸராக நடிக்கிறாராம்.

மேலும் இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், பிரசன்னா, வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஆரோல் கரோலி இசையமைக்கிறார். இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது. இன்று நடந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின், நடிகர்கள் விஷால், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாகும்.

Our Score