கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட்ட ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’..! 

கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட்ட ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’..! 

கிரிக்கெட் விளையாட்டையும், கிரிக்கெட் மைதானத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

சமீபத்தில் இந்த படக் குழுவினர் தங்கள் படத்தின் மிக முக்கிய காட்சியை திட்டம் போட்டு மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளனர்.

6w3b3675

இந்தக் காட்சிக்காக கதாநாயகன் கயல் சந்திரன், கதாநாயகி சாட்னா டைட்டஸ் ஆகியோருடன் இணைந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான நடிகர்கள் பங்கேற்று நடித்திருக்கிறார்கள்.

இதற்காகவே மிகப் பெரிய பொருட் செலவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தில் எந்தவித இடைவேளையும் இன்றி தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.  

இது பற்றிப் பேசிய படத்தின் இயக்குநர் சுதர், “ஒரு  காட்சிக்கு தேவையான இடமும், அரங்கமும் சரியாக அமைந்துவிட்டால், நிச்சயமாக அது அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். அப்படி ஒரு பிரம்மாண்டமான மாதிரி மைதானத்தை திட்டம் போட்டு அமைத்து தந்திருக்கிறார் எங்களின் கலை இயக்குநர் ரெமியன்.

இதற்கு பக்கபலமாய் விளங்கிய எங்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் பி.எஸ்.ரகுநாதன் (‘டூ மூவி பஃப்ஸ்’) மற்றும் பிரபு வெங்கடாச்சலம் (‘அக்ராஸ் பிலிம்ஸ்’) ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படப்பிடிப்பிற்கு தேவைப்படும் அனைத்தையும்  எந்தவித மறுப்பும் இல்லாமல்  அவர்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர்.

தற்போது எங்கள் படத்தின் படப்பிடிப்பானது வெற்றிகரமாக நிறைவு பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து, எங்கள் படத்தை தொழில் நுட்ப ரீதியாக மேலும் மெருகேற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன..” என்று உற்சாகமாக கூறினார்.

Our Score