செளந்தர்யா ரஜினியின் புதிய படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேவையாம்..!

செளந்தர்யா ரஜினியின் புதிய படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேவையாம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ படத்தினை இயக்கினார். அதன் பின்னர் அந்தப் படத்தின் தோல்வியினாலும், சில குடும்பப் பிரச்சினைகளாலும் படத் தயாரிப்பு மற்றும் இயக்க வேலைகளில் ஒதுங்கியே இருந்தார்.

soundarya-rajinikanth-1

இப்போது அவரது மகனுக்கு ஒரு வயது நிரம்பிவிட்டதால், மறுபடியும் திரைப்பட வேலைகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்.

‘கோச்சடையான்’ படத்திற்கு பின்பு சவுந்தர்யா இயக்கப் போகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். ‘இந்தப் படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவை’ என்று அதிசயமாக செளந்தர்யாவே நேற்றைக்கு டிவிட்டரில் செய்தியைப் பரப்பியிருக்கிறார்.

soundarya-rajini-movie-talent

இதே நேரம், தனுஷின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் தயாரிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு படம் இயக்கப் போகிறார் என்கிற தகவலும் நேற்று முன்தினம் வெளியானது.

இந்த நிலைமையில் தாணுவின் தயாரிப்பில் இந்தப் படம் முந்திக் கொண்டு வெளியாகியிருப்பதால் இரண்டும் வேறு, வேறு படங்களா அல்லது ஒரே படம்தானா..? தனுஷ் எழுத்தோடு நிறுத்திக் கொண்டு தாணுவை கை காட்டிவிட்டாரா என்பதெல்லாம் வரும் வாரங்களில் தெரிய வரும்.

திரைப்படங்களில் நடிக்க ஆர்வமுள்ள, தகுதியுள்ள கலைஞர்கள் இந்தப் புதிய படத்தில் நடிக்க விண்ணப்பிக்கலாம்.

Our Score