கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது..!

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது..!

பல வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராநேஷ்.M.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தூங்காவனம்’.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், திரிஷா,  கிஷோர், சம்பத், யூகிசேது, மது ஷாலினி, ஆஷா சரத், சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ், இசை – ஜிப்ரான், பாடல்கள் – வைரமுத்து, கலை இயக்குநர் – பிரேம், படத் தொகுப்பு – ஷான் முகம்மது, உடை வடிவமைப்பாளர் – கெளதமி, நடனம் – ஷோபி, நிர்வாகத் தயாரிப்பு – வைட் ஆங்கிள், திரைக்கதை – கமல்ஹாசன், வசனம் – சுகா, இயக்கம் – ராஜேஷ் எம்.செல்வா, தயாரிப்பு – எஸ்.சந்திரஹாசன், கமல்ஹாசன்.

இத்திரைப்படம் ஒரே நேர்த்தில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழில் ‘தூங்காவனம்’ என்றும், தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்யம்’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ளஹதராபாத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெற்றது.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதி கமல்ஹாசன் பாடிய பாடலின் உருவாக்கத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  அடுத்துத் தொழில் நுட்பப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் டிரெயிலர் வெளியாகவுள்ளது.

Our Score