AGS நிறுவனத்தின் முதல் படமாக 2006-ம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் 2-ம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாக்குகிறார்கள்.
ஏ.ஜி.எஸ். எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப் பயலே-2’- இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படைப்பு..!.
‘உன் ரகசியம் என் கையில் இருக்கும்வரை உன் சிண்டு என் கையில்’ என்று மிரட்டும் வித்தியாச வில்லனே கதை நாயகனாக உலா வரும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள்..!
அமலாபால் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் விவேக், ரோபோ சங்கர், முத்துராமன், எம்.எஸ்.பாஸ்கர், ஓ.ஏ.கே.தேவர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – செல்லத்துரை, கலை இயக்கம் – ஆர்.கே.நாகுராஜ், படத் தொகுப்பு – ராஜா மக்கள் தொடர்பு – நிகில், முகமது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், தயாரிப்பு – கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ். இயக்கம் – சுசி கணேசன்.
முதல் பாகத்தை போல, படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு சின்ன கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒருவித திருட்டுத்தனத்தின் சாயல் படர்ந்திருப்பது இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறதாம்..!.
“பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த ‘திருட்டுப் பயல்’களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக் காணோம்..!. சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப் பயல்களெல்லாம் இப்போது தொழில் நுட்ப திருட்டுப் பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள், தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையைவிட தற்போதைய சமூக சூழலே இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக அமைந்துவிட்டது..” என்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.
முதல் பாகத்தின் பெரும் பகுதி ஆஸ்திரிலேயாவில் படப்பிடிப்பு நடைபெற்றதை போலவே, ‘திருட்டுப் பயலே-2’-விற்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாம்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
[Not a valid template]