சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பூஜையுடன் துவங்கியது

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பூஜையுடன் துவங்கியது

சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்.’

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9-ம் தேதி துவங்குகிறது.

thaana-serntha-koottam-poojai-2

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதாநாயகன் சூர்யா, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்,  நடிகர் R.J.பாலாஜி, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்காக முற்றிலும் புதிய தோற்றத்துக்கு சூர்யா மாறி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

சூர்யாவின் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்கம்-3’ படத்தின் டீசர் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.