full screen background image

‘சதுரங்க வேட்டை’யைக் கைப்பற்றியது திருப்பதி பிரதர்ஸ்..!

‘சதுரங்க வேட்டை’யைக் கைப்பற்றியது திருப்பதி பிரதர்ஸ்..!

பெரிய பெரிய நிறுவனங்களே மூக்கில் விரல் வைத்து.. “இவங்ககிட்ட எங்கிருந்துதான் இவ்ளோ காசு வந்துச்சு..?” என்று யோசிக்க வைக்கிறது திருப்பதி பிரதர்ஸின் வர்த்தகத் தொடர்புகளும், பணிகளும்..!

இயக்குநர் லிங்குசாமியும், அவரது தம்பியான தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸும் இணைந்து நிர்வகிக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல படங்களைத் தயாரித்தும், சில படங்களை விநியோகமும் செய்து வருகிறது. சமீபத்தில் ரிலீஸாகி வெற்றி பெற்ற ‘மஞ்சப்பை’ படமும் திருப்பதி பிரதர்ஸ் விநியோகம்தான்..!

இந்த நிலையில் இயக்குநர் மனோபாலா சொந்தமாகத் தயாரித்த ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளதாம். இன்று படம் பார்த்து முடித்த சில நிமிடங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.

படத்தின் மேக்கிங் தங்களை மிகவும் அசத்திவிட்டதாகவும், நிச்சயம் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும், அதனாலேயே பெருமைமிக்க திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி விநியோகிக்க இருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Starcast: Natty, Ishara, Ponvannan, Illavarasu, Piraisudan, Valavan, Dharani, Ramachandiran

Director: H.Vinoth

Composer: Sean Roldan

Producer: Mano Bala, Sanjay Rawal

Banner :  Manobala’s Picture House and SR Cinema

Label: Think Music

Our Score