full screen background image

“நயன்தாரா இயக்குநர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்..” – ‘திருநாள்’ பட இயக்குநரின் நயன்தாரா புராணம்..!

“நயன்தாரா இயக்குநர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்..” – ‘திருநாள்’ பட இயக்குநரின் நயன்தாரா புராணம்..!

ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘திருநாள்.’ இசை – ஸ்ரீ, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி, எடிட்டிங் – வி.டி.விஜயன், கலை – சீனு ராவ், ஆக்சன் – சூப்பர் சுப்பராயன். இத்திரைப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார்.

kumudham image-5

‘திருநாள்’ படம் பற்றி இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கும் படத்தின் இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் வழக்கம்போல அதீதமான நயன்தாரா புராணத்தைப் பாடியிருக்கிறார்.

அதிலிருந்து சில பகுதிகள் :

“இந்தப் படத்தின் அழுத்தமான கதையுடன் கூடிய கதாபாத்திரம்.. ஜீவாவுக்கும் தனக்குமான கெமிஸ்ட்ரியில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பிக் கொள்ளும் எண்ணமுமே நயன்தாராவை இந்தப் படத்தில் கமிட் பண்ண வைத்த காரணங்கள்.

நயன்தாராவை படத்தில் கமிட் பண்றதுவரைக்கும்தான் கஷ்டம். ஆனால் கமிட் ஆகிவிட்டால். அதன் பின்பு தன்னுடைய கேரக்டரில் அவர் காட்டும் ஈடுபாடும், எளிமையும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய கிப்ட்.

jeeva-nayanthara-5

ஒரு ஷாட்டுக்கும், இன்னொரு ஷாட்டுக்குமான இடைவெளியில கேரவனுக்குள் போகும் சில ஹீரோயின்களை அடுத்தக் காட்சிக்கு அழைத்து வந்து நிறுத்துவதற்குள் தொண்டை தண்ணியும், நேரமும் வற்றிப் போய் வருத்தப்படும் இயக்குநர்கள் நிறைய பேர். அவர்களுக்கெல்லாம் கிடைத்த வரப் பிரசாதம்தான் நயன்தாரா.

jeeva-nayanthara-3

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் மானிட்டப் பக்கத்திலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்திருந்தார். முதல் நாள் என்பதால் ஷாட் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் அமர்ந்திருக்கிறார் என்று நினைத்தால்.. கடைசிநாள்வரையிலும் அப்படித்தான் இருந்தார். தான் தொட்டதெல்லாம் துலங்கும் இந்த நேரத்திலும் தலையில் கனம் ஏற்றாத… பந்தா இல்லாத… நயன்தாரா தி கிரேட்.

jeeva-nayanthara-6

‘ஐயா’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்துலதான் நயன்தாரா செம ஹோம்லியா வர்றாங்க. இதுவரையிலும் இல்லாத அளவுக்கு காமெடியிலும் கலக்கியிருக்காங்க. ‘யாரடி நீ மோகினி படத்தில் பண்ணியிருந்த ஹியூமரையும் தாண்டி இந்தப் படத்தில் நான் செய்த காமெடி செம சூப்பர்’ன்னு நயன்தாராவே அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்காங்க.

ஒரு நாள் அவங்க சம்பந்தப்பட்ட காமெடி சீன் எடுக்க ரெடியாகிக்கிட்டிருந்தோம். மதியம்வரைக்கும் அந்த சீனை எடுத்திட்டு இன்னொரு நாள் மீதமுள்ள காமெடி சீனை எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம்.

jeeva-nayanthara-4

ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிப் பார்த்த நயன்தாரா, ‘சீன் சூப்பரா இருக்கு.. இன்னிக்கே இந்த மூடுலயே காமெடி சீன்களை எடுத்திருங்க’ன்னு சொல்லி புல் டே கலக்கிட்டார். படத்தில் அவர் அடிக்கடி சொல்லும் ‘சான்ஸே இல்ல’ வசனத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற பிரத்யங்கரா தேவி கோயிலுக்குச் சென்றால் திருஷ்டி கழிந்துவிடும்னு சொல்வாங்க. இந்தக் கோயில் பற்றி கேள்விப்பட்ட நயன்தாரா ரொம்பவே ஆச்சரியமா விசாரிச்சு, ‘அந்தக் கோயிலுக்கு போகணும்’னு சொல்லிட்டு இருந்தார்.

மறுநாளே அந்தக் கோயிலிருந்து நயன்தாராவுக்கு பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார்கள். நயன்தாராவுக்கு பட்ட திருஷ்டியெல்லாம் கழிந்து அவங்க திறமைக்கும், குணத்துக்கும் ரொம்ப நாளைக்கு பீல்டில் நிலைச்சிருக்கணும்..” என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத்.

விக்னேஷ் சிவன் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது..! ஆட்களெல்லாம் கியூவுல நிக்குற மாதிரி தெரியுது..!

Our Score