full screen background image

தூத்துக்குடி சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘தெற்கத்தி வீரன்’ படம்

தூத்துக்குடி சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘தெற்கத்தி வீரன்’ படம்

சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரான சாரத் தானே நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘தெற்கத்தி வீரன்’.

கதாநாயகியாக அனகா நடித்துள்ளார். மற்றும் ‘முருகா’அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா ராம்மூர்த்தி, மது சூதனன் ராவ், மாரி வினோத், குட்டி புலி ராஜ சிம்மன், R.N.R.மனோகர், முல்லை, ரேணுகா, உமா பத்மநாபன், ரித்திகா, ஆரியன், நமோ நாராயணா, லொள்ளு சபா மனோகர், வெங்கல் ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதி – N.சண்முகசுந்தரம், இசை – ஶ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – V.J.சாபு ஜோசப், நடன இயக்கம் – சாண்டி, பாரதி, சண்டை பயிற்சி இயக்கம் – சூப்பர் சுப்பராயன், கனல் கண்ணன், கலை இயக்கம் – குருராஜ், தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின், பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி.

படம் பற்றி இயக்குநரும், நடிகருமான சாரத் பேசும்போது, “தூத்துக்குடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கமர்ஷியல் கலந்து  இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு இளைஞனும் இந்த படத்தை பார்க்கும் போது, அவர்களையே திரையில் பார்ப்பது போல் இருக்கும். இன்றைய சூழலில் சமூகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை வைத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளேன்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எழுச்சியுறும் இளைஞர்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் ஒடுக்குகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம்தான் இந்த தெற்கத்தி வீரன்.’

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்..” என்றார் சாரத்.

Our Score