full screen background image

மொபைல் போனில் புதிய படங்களைப் பார்க்க புதிய செயலி அறிமுகம்..!

மொபைல் போனில் புதிய படங்களைப் பார்க்க புதிய செயலி அறிமுகம்..!

இதுவரையிலும் திரைப்படங்கள் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தற்போது OTT  தளங்களிலும் வந்தது வந்து  கொண்டும் இருக்கின்றன.

இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக  உள்ளங்கையில் உள்ள அலைபேசியை திரையரங்கங்களாக மாற்றி தமிழ் திரையுல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுள்ளது.

இதன் முதல்படியாக மூவி டு மொபைல்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையுலகை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் மாதம்  தோறும் இரண்டு திரைப்படங்களை இந்த மொபைல் திரையரங்கில் பார்க்கலாம் என்று செயலியை உருவாக்கிய நிறுவனத்தினர் கூறினார்கள்.

இந்த செயலியில் முதல் படமாக யாஷிகா ஆனந்த், அசோக், சத்யன், சேஷு, வாவிக்ரம், மாறன், அம்பானி சங்கர், பயில்வான் ரங்கநாதன், ஆகியோர் நடித்து, இயக்குநர் ரங்கா இயக்கி, சாரதிராஜா தயாரித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான பெஸ்டி’ வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை வரும் ஜூலை 13-ம் தேதி முதல் சினிமா ரசிகர்கள் தங்களது அலைபேசியில் நேரடியாகவே 30 ரூபாய் டிக்கெட்டில் பார்க்கலாம்.

Our Score