full screen background image

“தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகரின் வலியை தெரிந்து கொண்டேன்” – அறிமுக நடிகர் சாரத்தின் அனுபவப் பேச்சு..!

“தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகரின் வலியை தெரிந்து கொண்டேன்” – அறிமுக நடிகர் சாரத்தின் அனுபவப் பேச்சு..!

சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘தெற்கத்தி வீரன்’.

முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தில் புதுமுகம் சாரத்  நாயகனாக நடிக்க, அனகா அவரது ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில்  முருகா’ புகழ் அசோக் குமார், கபீர் துஹான் சிங், மதுசூதனன், பவன், வேலா ராமமூர்த்தி, நமோ நாராயணா, ‘நாடோடிகள்’ புகழ் பரணி, ‘மாரி’ புகழ் வினோத், ரேணுகா, உமா பத்மநாபன், ராஜ சிம்மன், ஆர்யன், ஆர்.என்.ஆர் மனோகர், ரித்திகா மற்றும் ‘KPY’ புகழ் முல்லை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

N.சண்முக சுந்தரம் (ஒளிப்பதிவு), V.J.சாபு ஜோசப் (படத் தொகுப்பு), குரு ராஜ் (கலை இயக்கம்), பாரதி & சாண்டி(நடன அமைப்பு) ஆகியோர்  பணியாற்றியுள்ளனர்.

ஸ்டண்ட் மாஸ்டர்களான சூப்பர் சுப்புராயன் மற்றும் கனல் கண்ணன் ஆகியோரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளில் அசத்தலான திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் புதுமுக நாயகன்  சாரத்  இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் நாயகனாக நடிப்பதுடன் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதி படத்தையும் இயக்கியுள்ளார் சாரத்.

முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகியுள்ள  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகர் அசோக் பேசும்போது, “இந்தத் தெற்கத்தி வீரன்’ படத்தின் போஸ்டர் வெளியானபோதே இரு சகோதரர்களின் யுத்தம்’ என்று போடப்பட்டிருந்தது. இந்தப் படம் எனக்கு குடும்ப விழா போல்தான். இந்தப் படம் எனக்கு புதிய வாழ்க்கையை எனக்கு ஆரம்பித்து வைத்துள்ளது.

இப்படத்தை பற்றி முதலில் சொன்னபோது, ஹீரோவே எல்லாவற்றையும் செய்கிறார் என்றபோது டி.ஆர்., ஞாபகம்தான் வந்தது. என்னை இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது, “நான் இப்போது நாயகனாக சிறிய படங்களில் நடிக்கிறேன். எனக்கு இது சரியாக வருமா..?” என கேட்டேன். “முதலில் கதையைக் கேளுங்கள். அப்புறம் சொல்லுங்க..” என்றனர்.

கதை கேட்டேன். கதை சகோதரத்துவ போரை சொல்வதாக இருந்தது. அது எனக்கு பிடித்தது. படத்தில் சாரத் எனும் நபர் எனக்கு அண்ணனாகிவிட்டார். இந்தப் படத்தின் தூண் இவர்தான். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான கே.ராஜன் பேசும்போது, “இப்போது பிணத்தை வைத்து யூ டுயபர்கள் பிழைக்கிறார்கள். தமிழ் திரையில் சிறந்து விளங்கிய நடிகை மீனாவின் கணவர் இறப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள். அதைப் பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு  தமிழில் தலைப்பு வைத்திருப்பது மிகச் சிறப்பான விஷயம். இந்தப் படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. படத் தொகுப்பாளரின் பணி பாராட்டும்படி உள்ளது. இசையமைப்பாளர் ்ரீகாந்த் தேவாவின் இசை இந்த படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் சாரத் செய்துள்ளார். அவருடைய திறமையை நான் பாராட்டுகிறேன்.  படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

இசையமைப்பாளர் ்ரீகாந்த் தேவா பேசும்போது, “படத்தின் அனைத்து பாடல்களையும், இயக்குநர் சாரத்துதான் எழுதியுள்ளார், ஒரு புது கவிஞர் போல் அவரது எழுத்து இருந்தது. இயக்குநருக்கு யாரிடம் எப்படி வேலை  வாங்க வேண்டும் என தெரியும். படத்தின் நாயகனாகவும், தயாரிப்பாளரவும், நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசை சிறப்பாக வந்துள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. படம் சிறப்பாக வந்துள்ளது…” என்றார்.

கில்டு அமைப்பின் தலைவரான ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “தமிழ்ச் சினிமாவிற்கு ஒரு நல்ல நடிகன் கிடைத்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். படத்தின் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தங்களது முழு அர்பணிப்பையும், பங்களிப்பையும் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் ்ரீகாந்த் தேவாவின் இசை அபாரமாக உள்ளது. கண்டிப்பாக அவருக்கு இந்த படத்திற்காக விருது கிடைக்கும். விஜயகாந்துக்கு அப்புறம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக, இந்த படத்தின் ஹீரோ வந்திருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெற்றே தீரும்…” என்றார்.

தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகரான சாரத் பேசும்போது, “ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்பது எனது 17 வருட கனவு. அந்தக் கனவு இந்தத் ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலமாக நிறைவேறியுள்ளது.

ஒரு உண்மை சம்பவத்தை தழுவியதுதான் இந்தப் படம். அதை கமர்சியல் சினிமாவாக உங்களுக்கு தர விரும்பினேன். படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் 60 நாட்கள் எடுத்து கொண்டோம். படத்தின் எபெக்ட்ஸ் பணிகளில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம்.

இந்தப் படத்தை எடுத்து வெளியே கொண்டு வர நிறைய கஷ்டப்பட்டிருக்கிறோம். ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரின் வலி என்ன என்பதை இந்த படம் மூலமாக தெரிந்து கொண்டேன்.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன். நடிகர்கள் முழு அர்பணிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “ஶ்ரீகாந்த் தேவா எப்பொழுதும் குத்துப் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார். இந்த படத்தில் மெலடி பாட்டு போட்டிருப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது.  அவர் இதை தொடர வேண்டும்.

விருது பெற்ற நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கின்றனர், அது எனக்கும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இயக்குநர் யாரிடமும் வேலை பார்க்காமல், இயக்குநராக மாறியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, அவரது பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்தக் கதை ஒரு உண்மை சம்பவம் என்றார்கள். அதற்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

Our Score