full screen background image

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் ‘தீங்கிரை’ திரைப்படம்..!

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் ‘தீங்கிரை’ திரைப்படம்..!

சஹானா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தீங்கிரை’.

இந்தப் படத்தில் நடிகர் ்ரீகாந்த்தும், ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும் நடிக்கிறார்.

பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக என்.கே.ராகுல் பணியாற்றுகிறார். மணிகுமரன் சங்கரா படத் தொகுப்பை கவனிக்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளர் – ஆம்ஸ்ட்ராங் பிரவீன் மற்றும் ப்ரோடக்ஷன் கண்ட்ரோலர் – கே.எஸ். ஷங்கர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான பிரகாஷ் ராகவதாஸ்.

சந்தர்ப்ப, சூழ்நிலைதான் சிலரை இரையாக்கும். அதில் வெகு சில தருணங்களில் அந்த இரையே நம்மை வேட்டையாடத் துவங்கி நமக்குத் தீங்கு செய்யும் செயலே.. இந்தத் தீங்கிரை’ திரைப்படத்தின் கதைக் கரு.

சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக் களத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிகுந்த பொருட்செலவில் படமாக இருக்கிறது.

Our Score