நடிகர் விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட். இந்த நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களை விநியோகமும் செய்து வருகிறது. கூடவே சென்னையில் மால் தியேட்டர்களையும் நடத்தி வருகிறது.
இன்றைக்கு வெளியாகியிருக்கும் ’தேன்’ என்ற தமிழ்த் திரைப்படத்தை இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது.
இந்தத் ’தேன்’ திரைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும் “இத்திரைப்படம்தான் இந்தாண்டின் மிகச் சிறந்த திரைப்படமாகும்…” என்று பாராட்டியிருக்கிறார்கள்.
படம் பார்த்தத் திரையுலகப் பிரமுகர்களும் “தேன், தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்கத் திரைப்படம்..” என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இதனால் இந்த அளவுக்கு சிறப்பான இத்திரைப்படத்தை அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு அதிரடி சலுகையை ஏ.ஜி.எஸ். தியேட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். திரையரங்குகளில் பார்க்க வருபவர்களுக்கு நூறு ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நல்ல சினிமாவைத் தேடும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..!
நல்ல சினிமாவைப் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் இன்றைக்கே ‘தேன்’ படத்தைப் பாருங்கள்.