நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

நடிகர் கமல்ஹாசன் 176 கோடி ரூபாய் அளவுக்குத் தனக்குச் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியான மக்கள் நீதி மய்ய’த்தின் சார்பில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தபோது தன்னுடைய சொத்துப் பட்டியலையும் இணைத்துள்ளார்.

அதில் கிடைத்தத் தகவல்களின்படி நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.131.84 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருக்கின்றன.

ரூ.45.09 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளன.

இவை இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.176.93 கோடி அளவுக்கான சொத்துக்கள் கமல்ஹாசனுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும். ரூ.49.50 கோடிக்கு கடனும் கமல்ஹாசனுக்கு உள்ளது.

கமல்ஹாசனிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லெக்சஸ் காரும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரும் சொந்தமாக உள்ளன.

லண்டனில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீடு இருப்பதாகவும் தனது வேட்பு மனுவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Our Score