நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவரின் பெயரில் மொத்தம், 176.68 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையாத சொத்துகள் உள்ளதாக அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், நடிகர் கமல்ஹாசனின், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி சார்பில் போட்டியிடும் நடிகை ஸ்ரீபிரியா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதில், அவரது சொத்து விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி நடிகை ஸ்ரீபிரியாவின் பெயரில், 11.26 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும் 39 கோடி ரூபாய் மதிப்பில் அசையாத சொத்துக்களும் உள்ளன.
அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி பெயரில், 59.03 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 67.39 கோடி ரூபாய் மதிப்பில் அசையாத சொத்து என மொத்தம், 176.68 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன.
அதேபோல் நடிகை ஸ்ரீபிரியாவின் பெயரில், 2.50 கோடி ரூபாய் கடன்; கணவர் பெயரில், 39.20 கோடி ரூபாய் கடன் என, மொத்தம் தன்னுடைய குடும்பத்திற்கு, 41.7 கோடி ரூபாய் கடன் உள்ளதாக நடிகை ஸ்ரீபிரியாவின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.