full screen background image

‘தி வாரியர்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமை 16 கோடிக்கு விற்பனையாம்..!

‘தி வாரியர்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமை 16 கோடிக்கு விற்பனையாம்..!

‘தி வாரியர்’  திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப் பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை புரிந்திருக்கிறது…! 

இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிக்கும் ‘தி வாரியர்’ திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் பலவிதமான காரணங்களுக்காக மிகவும்  எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக இருக்கிறது.

Srinivasaa Silver Screen பேனர் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சித்தூரி இந்தப் படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும்  நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வெளியிடவுள்ளார். தமிழின் பிரபலமான இயக்குநரான லிங்குசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இரு மொழிகளில் உருவாகும்  இந்தப் படம், நாயகன் ராம் பொத்தினேனிக்கு கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொத்தினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார்.

தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது படத்தின் நாயகனான ராம் பொத்தினேனியின் திரை வாழ்க்கையில் இதுவொரு உச்சமான சாதனையாகும்.

இந்த ‘தி வாரியர்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும்,  இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘சீடிமார்’ படத்தின் பிரம்மாண்டமான  வெற்றியை தொடர்ந்து Srinivasaa Silver Screen  நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘தி வாரியர்’ படமும் மிகப் பெரிய ஹிட்டாகும் என நம்புகிறது.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

Our Score