full screen background image

‘தி லெஜண்ட்’ படம் உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் வெளியாகிறது..!

‘தி லெஜண்ட்’ படம் உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் வெளியாகிறது..!

லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று உலகெங்கும் ஐந்து மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

‘லெஜண்ட்’ சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர், ‘மொசலோ மொசலு’ பாடல், ‘வாடிவாசல்’ பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ‘பொ பொ பொ’ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு ‘லெஜண்ட்’ என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் ‘லெஜண்ட்’ சரவணன்.

எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ்’ ஜி.என்.அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.

மேலும், தமிழகம் எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.

தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மலையாள விநியோக உரிமையை மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் பெற்றுள்ளார்.

தெலுங்கு உரிமையை ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திருப்பதி பிரசாத் பெற்றிருக்கிறார்.

கன்னட மொழி உரிமையை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் செந்தில் பெற்றுள்ளார்.

ஹிந்தி விநியோக உரிமையை கணேஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நம்பிராஜன் பெற்றுள்ளார்.

வெளிநாட்டு உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் வாத்வா பெற்றுள்ளார்.

தான் நடித்த முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் உலகமெங்கும் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்திருப்பதை பார்த்து தமிழ்ச் சினிமாவுலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

Our Score