full screen background image

Amazon Prime Video-வில் பிரியா மணி, மனோஜ் பாஜ்பாய் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்

Amazon Prime Video-வில் பிரியா மணி, மனோஜ் பாஜ்பாய் நடிக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ்

உலகத்தின் மிகப் பெரிய OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவின், சமீபத்திய வெளியீடுகள் புதிய வித்தியாசமான தொடர்களை பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இதன் மூலம் திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் திரையுலகின் தயாரிப்பாளர்கள் இந்த தளத்தை ஒரு பெரிய தீர்வாக கண்டுபிடித்துள்ள நிலையில், இதன் இணையத் தொடர்கள் சர்வதேச தொடர்களுக்கு இணையாக உருவாக்கப்படுவதால் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்த்திருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் அனைத்து வலைத் தொடர்களும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மொழிகளுக்கிடைய ஏற்படும் தடைகளின் இடைவெளியைக் குறைத்து, பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களையும் ரசிக்க முடியும்.

அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது மிகப் பெரிய பொருட்செலவில் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற அடுத்த வலைத் தொடரை வெளியிடவுள்ளார்கள்.

இந்த வலைத் தொடரை D2R பிலிம்ஸ் நிறுவனத்தில் சார்பில் பிரபல இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து தயாரித்து, இயக்கியிருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் தேசிய விருது பெற்ற நடிகர் மனோஜ் பாஜ்பாய், தேசிய விருது பெற்ற நடிகை பிரியா மணி, ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன், நீரஜ் மாதவ், ஷாரிப் ஹாஷ்மி, குல் பினாங், தர்ஷன் குமார், சன்னி ஹிந்துஜா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘ஸ்ட்ரீ’, ‘கோ கோவா கான்’, ‘ஷார் இன் த சிட்டி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற ‘இரட்டை இயக்குநர்கள்’ என்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ராஜ் & டி.கே இருவரும் இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார்கள்.

The Family Man-Amazon-Poster-2

‘தி ஃபேமிலி மேன்’ ஸ்ரீகாந்த் திவாரி என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைக் கூறும் படமாக இருக்கும். தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புக்களையும் தவறாமல் இரண்டையும் சமநிலையில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதுதான் ‘தி ஃபேமிலி மேன்’.

இதில் 10 அத்தியாயங்களும் வேடிக்கையான அதே சமயம் மிரள வைக்கும் திரில்லர் திரைக்கதையைக் கொண்டுள்ளது.

10 அத்தியாயங்களை உள்ளடக்கிய இந்த ‘தி ஃபேமிலி மேன்’ தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன், ஜப்பான், பிரஞ்சு, இத்தாலி, பிரேசில், போர்ச்சுகீசு மற்றும் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்படும்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைத்து இடங்களிலும் சிறந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

vijay subramaniam-amazon

அமேசான் பிரைம் வீடியோ இந்திய நிறுவனத்தின்  இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், “அமேசான் தொடர்ந்து தனித்துவமான மற்றும் உயர் தரமான கதைகளை நம் பார்வையாளர்களுக்கு ‘தி ஃபேமிலி மேன்’ உடன் கொண்டு வருகிறது.

கேமராவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் திறமைகளை வலுப்படுத்தும் வீடாக இருக்கும் என உறுதிப்படுத்துகிறது. வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சமப்படுத்த முயற்சிக்கும் ஒரு குடும்ப மனிதனின் போராட்டங்கள், அனைவருக்கும் ஆழமாக தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இப்படம் அமைந்திருக்கும்.

raj-dk-directors

‘தி ஃபேமிலி மேன்’ தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான ராஜ் டி.கே., இருவரும் பேசும்போது, “எங்களது தயாரிப்பு நிறுவனம் மூலம், நீண்ட-வடிவ கதையைக் கூற விரும்பினோம். அதற்காக சரியான தளத்திற்காக காத்திருந்தோம். அப்போதுதான் அமேசான் பிரைம் என்னும் அற்புதமான பங்குதாரரைக் கண்டோம்.

புதிய கதைக் களம், சவாலானதாகவும், திருப்திகரமாகவும் அமைந்து இந்த ‘தி ஃபேமிலி மேன்’ உடன் எங்களது முதல் பயணத்தை உருவாக்கியுள்ளோம். இது உண்மையிலேயே சிறந்த பயணமாக இருந்தது.

பொதுவாக இது போன்ற ஆக்ஷன் திரில்லருடன் நகைச்சுவைத் தொடர்புபடுத்தப்படாததாகத்தான் இருக்கும். ஆனால், இத்தொடரை புவி-அரசியலோடு ஆக்ஷன் திரில்லராகவும், நகைச்சுவை கலந்தும் கொடுத்துள்ளோம்…” என்றனர்.

இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 20-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Our Score