டொராண்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் இடம் பெறும் ‘தட்றோம் தூக்றோம்’

டொராண்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் இடம் பெறும் ‘தட்றோம் தூக்றோம்’

மீடியா மார்ஷல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள தமிழ்த் திரைப்படம் ‘தட்றோம் தூக்றோம்’.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த தீ ஜெய் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி பௌசி நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலமுரளி பாலு இசை அமைக்க கபிலன் வைரமுத்து வசனம் மற்றும் பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தில் இடம் பெறும் மிக முக்கியமான  பண மதிப்பிழப்பு பற்றிய பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். புதுமுக இயக்குநர் எஸ்.அருள்  இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் 2016-ம் வருடம்  இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பு இழப்பை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட கற்பனை கலந்த திரைப்படம்.

படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு பத்து லடசம் பார்வைகளைக் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது இத்திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி படக் குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,  இதற்காக டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும் மீடியா மார்ஷல் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறது.

‘தட்றோம் தூக்றோம்’ திரைப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படுமாம்.